என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றது ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றது](https://media.maalaimalar.com/h-upload/2023/09/27/1956688-gunshoot01.webp)
X
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம், வெள்ளி வென்றது
By
மாலை மலர்27 Sept 2023 9:08 AM IST (Updated: 27 Sept 2023 9:09 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
- மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சிஃப்ட் சாம்ரா - ஆஷி சௌக்ஷி ஆகியோர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர்.
Next Story
×
X