search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஸ் ஒலிம்பியாட் 2024: தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்தியா வெற்றி
    X

    செஸ் ஒலிம்பியாட் 2024: தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்தியா வெற்றி

    • ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், பிரக்ஞானந்தா டிரா செய்தனர்.
    • பெண்கள் பிரிவில் ஹரிகா, வைஷாலி,தானியா தங்களது ஆட்டங்களில் 'டிரா' கண்டனர்.

    புடாபெஸ்ட்:

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில் ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார்.

    ஹரிகா, வைஷாலி,தானியா தங்களது ஆட்டங்களில் 'டிரா' கண்டனர். முடிவில் இந்தியா 2½-1½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவை வீழ்த்தி தொடர்ந்து 6-வது வெற்றியை ருசித்தது.

    ஆண்கள் பிரிவில் இந்திய அணி, ஹங்கேரியை சந்தித்தது. இதில் கருப்புநிற காய்களுடன் ஆடிய தமிழக வீரர் குகேஷ், ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ராப்போர்ட் ரிச்சர்ட்டுடன் 44-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா பீட்டர் லெகோவுடன் டிரா செய்தார்.

    மற்ற மூன்று இந்திய வீரர்களின் ஆட்டமும் நீண்ட நேரம் நீடித்தது. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.

    Next Story
    ×