search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஸ் ஒலிம்பியாட்: தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
    X

    செஸ் ஒலிம்பியாட்: தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

    • ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் வெற்றியை வசப்படுத்தினர்.
    • பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தனர்.

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.

    இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அஜர்பைஜானை 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 2.5-1.5. என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது.

    ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினர். நிஜாத் அபாசோவ் மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோருக்கு எதிராக ஆர் பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர். அய்டின் சுலைமான்லியை டி குகேஷ் தோற்கடித்தார்.

    Next Story
    ×