search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது குறித்து 6 மணி நேரம் ஆய்வு: ரோகித் சர்மா, கம்பீர் மீது கிரிக்கெட் வாரியம் பாய்ச்சல்
    X

    நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது குறித்து 6 மணி நேரம் ஆய்வு: ரோகித் சர்மா, கம்பீர் மீது கிரிக்கெட் வாரியம் பாய்ச்சல்

    • ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது.
    • மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

    இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 6 மணி நேரம் ஆய்வு நடத்தியது. பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பீர் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது. நியூசிலாந்து தொடர் முழுவதும் அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியது. கம்பீரின் பயிற்சி அணுகுமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி செயல்படும் விதம் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    Next Story
    ×