என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தொடர்ந்து முதலிடம்
- 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
- மெஸ்சி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை (Business magazine Forbes) ஆண்டுதோறும் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் ரொனால்டோ தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடம் பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
போர்ப்ஸ் தகவல்படி 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் அவருடைய சம்பளம் 136 மில்லியன் டாலரில் இருந்து இருந்து 260 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிரியாக பார்க்கப்படும் மெஸ்சி கடந்த முறை 2-வது இடத்தில் இருந்தார். தற்போது 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பார்சிலோனாஅணிக்காக விளையாடி வந்த மெஸ்சி தற்போது அமெரிக்க கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார்.
கோல்ஃப் வீரர் ஜான் ரஹ்ம் 218 மில்லியன் டாலருடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மெஸ்சி 135 மில்லியன் டாலருடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். கூடைப்பந்து வீரர் லே'பிரோன் ஜேம்ஸ் 128.2 மில்லியன் டாலருடன் 4-வது இடத்தையும், மற்றொரு கூடைப்பந்து வீரர் ஜியான்னிஸ் ஆன்டேடோகவுன்ம்போ 111 மில்லியன் டாலருடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கால்பந்து வீரர் எம்பாப்வே 110 மில்லியன் டாலருடன் 6-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
நெய்மர் (கால்பந்து) 108 மில்லியன் டாலர், கரிம் பென்சிமா (கால்பந்து) 106 மில்லியன் டாலர், ஸ்டீபன் கர்ரி (கூடைப்பந்து) 102 மில்லியன், லாமர் ஜேக்சன் (அமெரிக்க கால்பந்து) 100.5 மில்லியன் டாலருடன் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.