என் மலர்
விளையாட்டு
சேப்பாக்கத்தில் வெற்றி பெறுவது முக்கியமானது- சி.எஸ்.கே. அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பேட்டி
- சி.எஸ்.கே. அணி உள்ளூர் மைதானத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
- பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.
சென்னை:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருமான எரிக்சைமன்ஸ் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியின் 2-வது பாதியில் விளையாடி வருகிறோம். உள்ளூர் மைதானத்தில் (சேப்பாக்கம்) ஆடும்போது அதன் சாதகத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. இதனால் உள்ளூரில் விளையாடும் அனைத்து ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியமானது.
சி.எஸ்.கே. அணியில் மிகவும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாடக் கூடியவர்கள் இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் எல்லா அணிகளுக்கும் முக்கியமானது. சி.எஸ்.கே. அணி உள்ளூர் மைதானத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. அவர்களை மருத்துவக்குழு தினசரி கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.