என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
மரடோனா மரணத்தில் சர்ச்சை- 8 மருத்துவ ஊழியர்கள் மீது விசாரணை
- மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பியூனர்ஸ் அயர்ஸ்:
பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தற்போது மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் குடும்ப மருத்துவருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், உளவியலாளர் கார்லோஸ் டயஸ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் நான்சி ஃபோர்லினி மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 8 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதை அர்ஜென்டினா நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
இவர்களின் கவனக்குறைவு காரணமாக மரடோனா உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விசாரணை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.