என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
டீ விற்கும் சாய்வாலாவை தெரியுது.. ஹாக்கி வீரர்களை தெரியலை.. ஹர்திக் உருக்கம்
- கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் இன்றும் பொது வெளியில் அறியப்படாதவர்களாகவே உள்ளனர்.
- ரசிகர்கள் டோலி சாய்வாலாவிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது. ஹாக்கி, பேட்மின்டன், தடகளம் போன்ற விளையாட்டுகளுக்கு இந்தியாவில் சமீப காலத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தாலும், கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள் இன்றும் பொது வெளியில் அறியப்படாதவர்களாகவே உள்ளனர்.
இந்த நிலையில், விமான நிலையம் ஒன்றில் ரசிகர்கள் டோலி சாய்வாலாவிடம் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவத்தை இந்திய அணியின் ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய ஹர்திக், "விமான நிலையத்தில் நான் அதை என் கண்களாலேயே பார்த்தேன். ஹர்மன்ப்ரீத், நான், மன்தீப் என நாங்கள் 5-6 பேர் இருந்தோம். டோலி சாய்வாலாவும் இருந்தார். மக்கள் அவருடன் கிளிக் செய்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த யாருக்கும் எங்களை அடையாளம் தெரியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தோம்."
"ஹர்மன்ப்ரீத் 150 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார், மன்தீப் 100க்கும் மேற்பட்ட ஃபீல்டு கோல்களை அடித்துள்ளார். ஒரு தடகள வீரருக்கு புகழும் பணமும் ஒன்றுதான். ஆனால் மக்கள் உங்களை பார்த்து பாராட்டும் போது, ஒரு விளையாட்டு வீரருக்கு அதைவிட பெரிய திருப்தி வேறெதுவும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் ஹாக்கி வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் பற்றி பேசிய ஹர்திக் சிங், "கிரிக்கெட் வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் 17 முதல் 18 வரை இருக்கும். ஆனால் ஹாக்கி வீரர்களின் யோ யோ டெஸ்ட் முடிவுகள் 22-23 வரை இருக்கும். மேலும், ஏழு பேர் அடங்கிய ஹாக்கி அணி வீரர்களின் அதிகபட்ச ஸ்கோர் 23.8 வரை இருக்கும்," என்று தெரிவித்தார்.