search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரெஞ்ச் ஓபனை வென்றது மகிழ்ச்சியான தருணம்: சிராக் ஷெட்டி நெகிழ்ச்சி
    X

    பிரெஞ்ச் ஓபனை வென்றது மகிழ்ச்சியான தருணம்: சிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

    • பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
    • எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி தைவானின் பி.ஹெச். யாங்- ஜே.எச். லீ ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றியது இந்திய ஜோடி. ஆனால் 2-வது செட்டில் தைவான் ஜோடி கடும் சவால் விடுத்து அடுத்தடுத்து புள்ளிகள் கைப்பற்றியது என்றாலும், இந்திய ஜோடி 2-வது செட்டிடையும் 21-17 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றது சிறப்பான தருணம். இந்த இடத்தில் விளையாடிய போட்டிகளில் சிறந்த போட்டிகளில் ஒன்று என சிராக் ஷெட்டி தெரிவித்துள்ளது.

    மேலும், இது தொடர்பாக சிராக் ஷெட்டி கூறுகையில் "கடந்த சில வாரங்களாக தைவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறந்த எதிர் ஜோடியை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்தியது. அவர்களை எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது என்பது எங்களுக்கு தெரியும்.

    அவர்களுடைய தரவரிசையில் உயர்ந்ததாக இல்லை. ஆனால் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் செட்டை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது செட்டின் தொடக்கத்தில் சற்று நடுக்கம் இருந்தது. அதன்பின் சுதாரித்துக் கொண்டு கைப்பற்றி விட்டோம்.

    இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சியானதாக உணர்கிறேன். பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் சந்தோசத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறினர். அது பொய்யாக இருக்கும். நாங்கள் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த வாரம் இன்னொரு தொடர் உள்ளது. இதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

    Next Story
    ×