என் மலர்
விளையாட்டு
ஆன்லைன் செஸ்: கார்ல்சனை வீழ்த்திய 9 வயது சிறுவன்
- கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
- புல்லட் பிரால் முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் போட்டி ஒன்றில் 9 வயது வங்கதேச பள்ளி மாணவனிடம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. வங்கதேச நாளிதழில் வெளியான செய்தியின்படி, FIDE மாஸ்டரான பயிற்சியாளர் நைம் ஹக், தனது மாணவன் கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
டாக்காவைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ரியான் ரஷீத் முக்தாவுக்கும் கார்ல்சனுக்கும் இடையில் ஆன்லைனில் நடந்ததாக கூறப்படும் போட்டி ஜனவரி 18-ம் தேதி புல்லட் பிரால் முறையில் நடந்ததாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
செஸ் வலைதளத்தில் (chess.com) உள்ள தனது அக்கவுண்ட் மற்றும் ப்ரோபைலை தனது மாணவர் ரியான் ரஷீத்-க்கு வழங்கியதாக நைம் தெரிவித்துள்ளார். செஸ் வலைதளத்தில் விளையாடும் போது, ஆன்லைனில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் கார்ல்சனுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. புல்லட் பிரால் முறையில் விளையாடும் போது, வீரர்கள் தங்கள் நகர்வுகளை முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து பேசிய நைம், "நான் முக்தாவுக்கு சதுரங்கம் கற்று கொடுக்கிறேன். அவருக்கும் எப்பவும் ஆன்லைனில் விளையாட மட்டுமே பிடிக்கும். இதனால் நான் அவருக்கு என் செஸ் ஐடியைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்தேன்."
"பிறகு, அவர் திடீரென்று என்னை அழைத்து கார்ல்சனை தோற்கடித்ததாகக் கூறினார். முதலில், என்னால் அதை நம்ப முடியவில்லை. பின்னர் அவர் எனக்கு ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் அனைத்து விளையாட்டு விவரங்களையும் அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன்," என்று தெரிவித்தார்.