என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு போட்டி- தமிழக அணிக்கு 5 பதக்கம்
- வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.
- பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி. கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கொச்சி:
24-வது தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தை பிடித்தது. தமிழக அணிக்கு 5 பதக்கம் கிடைத்தது.
14 வயதுக்குட்பட்ட தனிநபர் பாயல் பிரிவில் நிபின்ராஜ் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும், அபிலின் ஷானு (கன்னியாகுமரி) சபரே பரிசுப் வெள்ளிப் பதக்கமும், பெஜினோ ஜிப்ரின் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும் பெற்றனர்.
14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாயல் பிரிவில் தமிழக அணிக்கு (நிபின்ராஜ், ஆஸ்கெர், அகிலேஷ், திருக்குமரன்) வெண்கல பதக்கம் கிடைத்தது. அணிகள் சாப்ரே பிரிவில் வெள்ளிப்பதக்கம் (ஆஸ்பின், வினிஷ்குமார், ஷானு, நரேன்) கிடைத்தது.
பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி.கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.