search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அப்போ சரியான மனநிலையில் இல்லை.. இஷான் கிஷன் ஓபன் டாக்
    X

    அப்போ சரியான மனநிலையில் இல்லை.. இஷான் கிஷன் ஓபன் டாக்

    • மீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார்.
    • பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு தெரியாது இந்த பிரேக் அவரது வாழ்க்கையை மாற்றப் போகும் தருணம் என்று.

    இஷான் கிஷன் இந்திய அணிக்கு கடைசியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலயாவை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.

    அதற்கு பிறகு நடைபெற்ற ரஞ்சி டிராபியிலும் இஷான் விளையாட மறுத்தார். இதனால் பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் மறுபடியும் விளையாட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடினால் மட்டுமே அவரால் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் என கூறியுள்ளார்.

    இது குறித்து சமீபத்தில் இஷான் கிஷன் அளித்த பேட்டியில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சரியான மனநிலையில் நான் இல்லை. தொடர்ந்து நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாம். இப்போது வருத்தமாகத் தான் உள்ளது." என்று கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவர் நினைத்ததுப் போல் விளையாட முடியவில்லை. இதனால் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

    Next Story
    ×