search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது புனேரி பால்டன்
    X

    புரோ கபடி லீக்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது புனேரி பால்டன்

    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
    • இதில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92 புள்ளி) ஆகிய அணிகள் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

    தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் முறையே 3 முதல் 6 இடங்களை பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    Next Story
    ×