search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தொடர்ச்சியாக ராஜஸ்தான் 4-வது தோல்வி: பேட்ஸ் மேன்கள் மீது சஞ்சு சாம்சன் பாய்ச்சல்
    X

    தொடர்ச்சியாக ராஜஸ்தான் 4-வது தோல்வி: பேட்ஸ் மேன்கள் மீது சஞ்சு சாம்சன் பாய்ச்சல்

    • ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    • பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்து ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4- வது தோல்வியை தழுவியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 145 ரன் என்ற எளிதான இலக்கு இருந்தது.

    ரியான் பராக் 34 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி ) , அஸ்வின் 19 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் சாம் கரண் 41 பந்தில் 63 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவேஷ் கான், சாஹல் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ச்சியாக 4- வது தோல்வியை தழுவியது. ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்ற அந்த அணி மொத்தத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் தொடர்ந்து 2- வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 4 போட்டியில் தோற்றதால் பேட்ஸ்மேன் களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சாடியுள்ளார்.இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 144 ரன்கள் போதுமானது கிடையாது. நாங்கள் 160 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

    கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.

    நாங்கள் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும்.

    இதை செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும் . ஆனாலும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் போராட வேண்டும்

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    Next Story
    ×