search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பும்ரா தனி ஒருவராக போராடுகிறார்- ரவிசாஸ்திரி பாராட்டு
    X

    பும்ரா தனி ஒருவராக போராடுகிறார்- ரவிசாஸ்திரி பாராட்டு

    • பும்ரா இல்லையென்றால் முதல் டெஸ்டில் தோற்று இருக்கும்.
    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

    பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் அவர் தலைமை பொறுப்பை ஏற்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட் (முதல் இன்னிங்ஸ் 5, 2-வது இன்னிங்ஸ் 3)வீழ்த்தினார். 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற அவரது பந்து வீச்சு காரணமாக அமைந்தது. 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டும், 3-வது டெஸ்டில் 9 விக்கெட்டும் (முதல் இன்னிஸ் 6, 2-வது இன்னிங்ஸ் 3) கைப்பற்றினார்.

    இந்த தொடரில் அவர் 3 டெஸ்டில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் 3-வது டெஸ்டில் ஆகாஷ் தீப்புடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பாலோ ஆனை தவிர்த்தார்.

    இந்த நிலையில் பும்ராவை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தனி ஒருவராக இந்திய அணிக்காக போராடி தற்காத்து வருகிறார். பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆகாஷ் தீப்புடன் இணைந்து பாலோ ஆனை தவிர்த்தார். பும்ரா இல்லையென்றால் முதல் டெஸ்டில் தோற்று இருக்கும். பந்து வீச்சில் அவர் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்.


    4-வது டெஸ்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பெரிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு கை கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கடைசி 2 டெஸ்டில் வெற்றி பெற இயலும்.

    ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவரது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹெட் இந்திய அணிக்கு தொடர்ந்து தலைவலியாக உள்ளார். அவரை டிராவிஸ் 'ஹெட்ஏக்' (தலைவலி) என்று தான் செல்லமாக அழைக்கின்றனர்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    Next Story
    ×