search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஷஸ் தொடர்.. இதெல்லாம் பிரதமர்கள் செய்யுற காரியமா? வைரலாகும் வீடியோ
    X

    ஆஷஸ் தொடர்.. இதெல்லாம் பிரதமர்கள் செய்யுற காரியமா? வைரலாகும் வீடியோ

    • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
    • அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில், சண்டை மற்றும் சர்ச்சைகளும் வந்தம் வண்ணம் இருந்தது. பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை. 100-வது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.


    இந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.

    அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார். இதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் காட்ட, உடனடியாக சுதாரித்த ரிஷி சுனக், சாண்ட்பேப்பரை மறந்துவிட்டதாக பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சாண்ட்பேப்பரை வைத்து பந்தை சேதப்படுத்தியதை அவர் நினைவு கூறினார்.

    இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து கலாய்த்து கொண்டது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×