search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    போற எல்லா நிகழ்ச்சிக்கும் பதக்கத்தை கொண்டு போய் காட்டணுமா?..  விமர்சனத்துக்கு மனு பாக்கர் நச் பதில்
    X

    போற எல்லா நிகழ்ச்சிக்கும் பதக்கத்தை கொண்டு போய் காட்டணுமா?.. விமர்சனத்துக்கு மனு பாக்கர் நச் பதில்

    • தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார்.
    • செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பதக்கங்களை எடுத்துச் சென்று காட்டி வருவதாக விமர்சனம் எழுந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இந்தியாவை சேர்ந்த இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார்.

    ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பின் நாடு திரும்பிய மனு பாக்கர் தற்போது ஓய்வில் உள்ளார். அவரை கவுரவிக்கும் விதாமாக தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் மனு பாக்கர் தான் ஒலிம்பிக்சில் வென்ற பதக்கங்களை, செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று காட்டி வருவதை சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு மனு பாக்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பாரிஸ் ஒல்லிபிக்சில் நான் வென்ற பதக்கங்கள் இந்தியாவுக்கு சொந்தமானது. எந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பதக்கங்களை காட்டச் சொன்னாலும் அதை நான் பெருமையுடன் செய்கிறேன். எனது அழகு வாய்ந்த இந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வழியாக இதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×