என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் ஸ்ரீகாந்த்
- இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார்.
- வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி ஃபெங் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 14-21, 21-14, 12-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். அத்துடன், தொடரில் இருந்தும் வெளியேறினார்.
தரவரிசையில் இடம் பெறாத ஸ்ரீகாந்த், ஃபெங் இருவருமே துவக்கம் முதலே கடுமையாக போராடினர். ஆட்டத்தின் துவக்கத்தில் ஸ்ரீகாந்த் முன்னேறினாலும், பிறகு ஃபெங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட இடைவேளையின் போது 11-7 என முன்னிலை வகித்தார். ஸ்ரீகாந்த் சில தவறுகளை செய்ததால் பின்னடைவை சந்தித்தார்.
ஃபெங்கின் கோர்ட் கவரேஜ் மற்றும் எதிர்பார்த்து ஆடும் திறமை, ஸ்ரீகாந்த்தின் ஆட்டத்தை விட சிறப்பாக இருந்தது. ஸ்ரீகாந்த் வலைக்கு அருகில் பல தவறுகளை செய்தார்.
முதல் செட் ஆட்டத்தில், தன்னுடைய பழைய விளையாட்டு பாணியை இழந்தவராக தெரிந்த ஸ்ரீகாந்த், ஒரு சில இடங்களில் மட்டுமே நன்றாக ஆடினார். இந்த ஆட்டத்தில் முற்றிலுமாக வழக்கமான ஆட்டத்தில் இருந்து விலகியவராக தெரிந்தார். அதே சமயம் ஃபெங், தனது டிராப் ஷாட்களை துல்லியமாக அடித்து அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து அடுத்தடுத்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார். குறிப்பாக வலைக்கு அருகில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த செட்டை கைப்பற்றி 1-1 என சமன் செய்தார்.
ஆனால் வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார். இதனால் ஃபெங் வசம் ஆட்டம் திரும்பியது. இடைவேளையின்போது, ஃபெங் தனது காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையிலும், 5 புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தார்.
அதன்பின்னரும், காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்ரீகாந்தால் புள்ளிகளுக்கான இடைவெளியை நிரப்ப முடியவில்லை. இதனால் ஃபெங் அந்த செட்டையும் எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இவர்கள் இருவரும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். இருவரும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்