என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
தமிழக அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி- ஸ்குவாஷ் போட்டியில் மேலும் 2 பதக்கம் உறுதி
- குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
- கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
கேலோ இந்தியா விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், 4 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்து இருந்தது.
இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியானது. ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அரை இறுதியில் ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அசாமையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி உத்தர பிரதேசத்தையும், பெண்கள் அணி மாராட்டியத்தையும் எதிர்கொள்கிறது. தமிழக அணிக்கு 2 தங்கம் அல்லது 2 வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.