என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
பில்லியன் டாலர் லீக் வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள்- ரமீஸ் ராஜா
- குரூப் 12-ல் திணறிய பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
- முதல் இடம் பிடித்த இந்தியா அரையிறுதியோடு வெளியேற்றம்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட்டான ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் ஐ.பி.எல். தொடரில் இருந்து தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டேன் என பல்வேறு நாட்டு வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியால் ஐ.பி.எல். தொடங்கிய பிறகு உலகக் கோப்பையை வென்றது கிடையாது.
பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட சங்கத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, ஐ.பி.எல். தொடரை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''பில்லியன் டாலர் லீக் அணிகள் எங்களுக்கு பின்னால் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட் வீரர்களை விட சிறந்தவர்கள். நாங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.