என் மலர்
டென்னிஸ்

X
கத்தார் ஓபன்: காலிறுதியில் கார்லஸ் அல்காரஸ் தோல்வி
By
மாலை மலர்21 Feb 2025 5:15 PM IST

- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
Next Story
×
X