என் மலர்
டென்னிஸ்
X
திடீரென ஓய்வை அறிவித்த முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை
Byமாலை மலர்7 Feb 2025 5:00 AM IST
- ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து ஹாலெப் விலகினார்.
- கடந்த 2017-ம் ஆண்டில் முதல் முறையாக நம்பர் ஒன் தரவரிசையை அடைந்தார்.
டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சிமோனா ஹாலெப்.
இந்நிலையில், ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் டென்னிசில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தனது உடல்நலப் பிரச்சனைகளே ஓய்வுபெறுவதற்கான முதன்மை காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் உலக நம்பர் 1 ஆனேன். கிராண்ட்ஸ்லாம் வென்றேன். டென்னிசுக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது. நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்ப்போம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
முழங்கால் மற்றும் தோள்பட்டை பிரச்சனை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து ஹாலெப் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிமோனா ஹாலெப் கடந்த 2017-ம் ஆண்டில் முதல் முறையாக நம்பர் ஒன் தரவரிசையை அடைந்தார். 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
Next Story
×
X