என் மலர்
டென்னிஸ்

X
கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 6 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
By
மாலை மலர்13 Feb 2025 10:09 PM IST

- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story
×
X