search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    துபாய் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவை வெளியேற்றிய நெதர்லாந்து வீரர்
    X

    துபாய் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவை வெளியேற்றிய நெதர்லாந்து வீரர்

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என மெத்வதேவ் கைப்பற்றினார். இதில் சுதாரித்த கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 7-6 (9-7), 7-5 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் மெத்வதேவ் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

    மெத்வதேவ் சமீபத்தில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் பாதியில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×