search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன்: ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு தகுதி- சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்க ஓபன்: ஸ்வியாடெக் 2-வது சுற்றுக்கு தகுதி- சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

    • ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    • பெகுலா, வோஸ்னியாக்கி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரும், 4 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) தொடக்க சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லி டி யூவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் ஒரு செட்டை இழந்து இருந்தார். அல்காரஸ் 2-வது சுற்றில் போடிக்வான்டே சேன்ட் குல்ப்புடன் (நெதர்லாந்து) மோதுகிறார்.

    உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மெக்டொனால்டை 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக் கில் வென்றார். மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள மெட்வ தேவ் (ரஷியா), அர்தர் பைல்ஸ் (பிரான்ஸ்) உள் ளிட்ட வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    உலகின் 11-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோகினாகிஸ் 7-6 (7-5), 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-6 (8-6) என்ற கணக்கில் ரஷிய வீராங்கனை காமிலா ராக்சி மோவாவை தோற்கடித்தார். 4-ம் நிலை வீரார்களான ரைபகினா (கஜகஸ்தான்) 6-வது வரிசையில் இருக்கும் பெகுலா (அமெரிக்கா) வோஸ்னியாக்கி (டென் மார்க்) உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    Next Story
    ×