என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி
Byமாலை மலர்26 Nov 2024 8:23 AM IST
- முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
- லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
இதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் குகேசை விட வேகமாக காய்களை நகர்த்திய லிரெனின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியது. 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். அப்போது அவரை விட எதிராளியிடம் 3 காய்கள் அதிகமாக இருந்தன. கிளாசிக்கல் வடிவிலான செஸ்சில் டிங் லிரென் 10 மாதங்களுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காயுடன் ஆடுகிறார்.
Next Story
×