என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
198 வகை பறவைகள் வருகை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு புதுவரவு இமயமலை 'நீல சோலைபாடி'
- இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன.
- வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன.
வேளச்சேரி:
பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் பகுதி சிறப்பு பெற்றது. வழக்கமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காட்சிஅளிக்கிறது. இதனால் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன. இதுகணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தின் பல் வேறு பகுதிகளுக்கும், தமிழகம் வழியாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் வலசை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்து செல்வதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்பு தற்போது முடிந்து உள்ளது.
இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் வலசை பறவையான நீல சோலைபாடி பறவை இலங்கை செல்லும் வழியில் பள்ளிக்கரணைக்கு வந்துள்ளன.புது வரவாக, நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப் பான் ஆகிய இரண்டு பறவைகள் இணைந்துள்ளன. இத்துடன் சேர்த்து இங்கு, 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. பழுப்பு மார்பு ஈ பிடிப்பான், தென் சீனா மற்றும் மியான்மர், தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும். சிறு பூச்சிகளையே இது உணவாக எடுத்துக் கொள்ளும் என்பதால், நீர் நிலை மட்டுமல்லாது புதர் காடுகளில் தான் இது காணப்படும். நீல தொண்டை பிடிப்பான், செந்தலை பூங்குருவி, அரசவால் ஈ பிடிப்பான், கொண்டை குயில், பழுப்பு ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் பள்ளிக்கரணையில் தற்போது முகாமிட்டுள்ளன என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்