என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழை எதிரொலி- சென்னையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 2 விமானங்கள் ரத்து
    X

    தொடர் மழை எதிரொலி- சென்னையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 2 விமானங்கள் ரத்து

    • தொடர் மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவு.
    • மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், இன்று புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரூ- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், மாலை 6.10 மணிக்கு சென்னை- பெங்களூரு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மழை தொடர்ந்து நீடித்து, பயணிகள் குறைவாக இருந்தால், மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×