என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சிதம்பரத்தில் 22 செ.மீ. கொட்டி தீர்த்தது: என்.எல்.சி.யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு சிதம்பரத்தில் 22 செ.மீ. கொட்டி தீர்த்தது: என்.எல்.சி.யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/01/08/2000414-1.webp)
சிதம்பரத்தில் 22 செ.மீ. கொட்டி தீர்த்தது: என்.எல்.சி.யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
- ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.