என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வயதான தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது
- கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
- கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் கடந்த 22-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியான சோழன்- வனஜா ஆகியோரை மர்ம கும்பல் கட்டிப்போட்டு கத்திமுனையில் 70 பவுன் நகை, ரூ.3½ லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.
இந்த கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆவடியை சேர்ந்த புருசோத்தமன், ராஜீ, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த திலீப் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






