search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் அருகே நடுரோட்டை மறித்து நின்ற 3 காட்டு யானைகளால் பரபரப்பு- போக்குவரத்து பாதிப்பு
    X

    வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டில் நிற்கும் யானைகளை படத்தில் காணலாம்.

    சத்தியமங்கலம் அருகே நடுரோட்டை மறித்து நின்ற 3 காட்டு யானைகளால் பரபரப்பு- போக்குவரத்து பாதிப்பு

    • காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.

    இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

    Next Story
    ×