search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்- சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
    X

    தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்- சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

    • புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
    • மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றம்.

    தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன.

    சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது.

    இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில் மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×