என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போலீஸ் நிலையம் புகுந்து தாக்குதல்: தி.மு.க.வினர் 5 பேரும் 29-ந்தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
- காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது.
- போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார்.
இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்