என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
- தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
சென்னை:
சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்:
1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)
2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)
3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)
4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)
5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)
இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்