என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி
- மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
- மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள தர்ம கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் செல்வராஜின் மனைவி சந்திரா, எழுந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த 6 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், செல்வராஜ், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.
மேலும் மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது? என்று விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் விரைந்து வந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.