search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரியை குளிர வைத்த மழை: பேச்சிப்பாறையில் 68.8 மில்லி மீட்டர் பதிவு
    X

    மழையின் காரணமாக சுசீந்திரம் சோழன் திட்டை அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீரை காணலாம்.

    குமரியை குளிர வைத்த மழை: பேச்சிப்பாறையில் 68.8 மில்லி மீட்டர் பதிவு

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் மழை நீடித்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இதமான குளிர்காற்று வீசியது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. இரணியல், குளச்சல், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 68.8 மல்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை இன்றும் ஒரு அடி உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் கடைமடை பகுதியில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் அளவில் உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.85 அடியாக இருந்தது. அணைக்கு 1007 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 552 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 68.8, பெருஞ்சாணி 19.2, சிற்றாறு 1-12.2, சிற்றார் 2-9.2, பூதப்பாண்டி 9.8, களியல் 10, கன்னிமார் 5.8, கொட்டாரம் 8.2, குழித்துறை 39, மயிலாடி 5.4, நாகர்கோவில் 8.2, புத்தன்அணை 17.6, சுருளோடு 33.6, தக்கலை 6.2, குளச்சல் 8.6, இரணியல் 23, பாலமோர் 37.2, மாம்பழத்துறையாறு 10, திற்பரப்பு 15.2, கோழிபோர்விளை 6.2, ஆனைகிடங்கு 7.2, அடையாமடை 8.1, முக்கடல் 6.2.

    Next Story
    ×