என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![76-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை 76-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை](https://media.maalaimalar.com/h-upload/2024/02/24/2011624-eps.webp)
76-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- கட்சி கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவினை அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை கழகத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வருங்கால முதல்வர் வாழ்க. எடப்பாடியார் வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர்.
தலைமை கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் 76-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 76 கிலோ எடையுள்ள கேக்கினை வெட்டி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார். லட்டும் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அங்கு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. தம்பித்துரை எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், வளர்மதி, நத்தம் விசுவநாதன்,கோகுல இந்திரா, பெஞ்சமின், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாதவரம் மூர்த்தி, கே.பி.கந்தன், வெங்கடேஷ் பாபு, வக்கீல் பிரிவு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை, தி.நகர் பகுதி செயலாளர் ஆர்.எஸ். வேலு மணி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி. சேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவரணி வக்கீல் பரணி, ஏ.எம்.காமராஜ், எம்.ஜி.ஆர். நகர் குட்டிவேல் ஆதித்தன், வேளச்சேரி மூர்த்தி, வேல் ஆதித்தன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.