search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கிய போலீஸ்-ஏட்டு: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
    X

    சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கிய போலீஸ்-ஏட்டு: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    • காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×