என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வரும் 9-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆலோசித்தார்.
- அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
சென்னை:
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையே, தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, சட்டசபை தேர்தலுக்கு தயாராகுவது, தேவையான குழுக்களை அமைப்பது, சசிகலா, ஓபிஎஸ் குறித்த விஷயங்களை விவாதிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.