என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பிளஸ்-2 தேர்வு எழுதிய கோவை ஜெயில் கைதிகள் 12 பேரும் தேர்ச்சி பிளஸ்-2 தேர்வு எழுதிய கோவை ஜெயில் கைதிகள் 12 பேரும் தேர்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/05/08/1877800-8.webp)
பிளஸ்-2 தேர்வு எழுதிய கோவை ஜெயில் கைதிகள் 12 பேரும் தேர்ச்சி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
- அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.
கோவை:
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.