search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- கைதான கிராம நிர்வாக அதிகாரி ஜெயிலில் அடைப்பு
    X

    வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- கைதான கிராம நிர்வாக அதிகாரி ஜெயிலில் அடைப்பு

    • பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    நாகர்கோவில்:

    பத்துகாணி பகுதியைச் சேர்ந்தவர் புரோன் விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    கிராம நிர்வாக அதிகாரி முத்து (வயது 49) என்பவர் புரோன் கொடுத்த மனுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் நேரில் சந்தித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசியபோது ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவதாக கூறியுள்ளார். இது குறித்து புரோன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி முத்துவை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை புரோனிடம் கொடுத்து அனுப்பினார்கள். கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அதிகாரி முத்துவிடம் புரோன் ரூ.500 நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. எக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களையும் போலீசார் சரி பார்த்தனர்.

    அப்போது பணம் வாங்க எழுதி வைத்திருந்த ஆவணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். சுமார் 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் குழித்துறையில் கிராம நிர்வாக அதிகாரி முத்து தங்கி இருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவரை வருகிற 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துவின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ராயகிரி ஆகும்.

    Next Story
    ×