என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தேசிய கொடியை குப்பையில் போட முயன்ற உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
- காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.
- இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்றார்.
உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் அதிகளவில் மைதானத்திற்கு வந்தனர்.
அவ்வாறு மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் பலர் இந்திய தேசிய கொடியுடன் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். அப்போது மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ரசிகர்கள் கையில் இருந்த இந்திய தேசிய கொடிகளை பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில், காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் ரசிகர் ஒருவரிடம் இருந்து வாங்கிய இந்திய தேசிய கொடியை அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட முயன்றார். இந்த சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை விளக்கம் அளித்து இருந்தது.
அதன்படி இந்திய தேசிய கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் துறை ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.