search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்: விவசாயிகள்-பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    அவினாசியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்-பொதுமக்கள்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்: விவசாயிகள்-பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது.
    • விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    அவினாசி:

    திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது. இதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி உள்ளோம். தற்போது அந்த திட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ளதன் மூலம் ஏதோ 2-வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றது போல் உள்ளது. இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இந்த திட்டம் நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×