என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புல்மேடு பாதையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு- மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை
- வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
- பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் புல்மேடு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
கூடலூர்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தரிசனத்துக்கு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இதேபோல் வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ஜீப், பஸ் வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. தூரம் வனப்பகுதியில் பாதயாத்திரையாக சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம்.
பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த 16ந் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்களும் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் புல்மேடு பாதை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடைதிறக்கும்போதே புல்மேடு பாதையும் திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புல்மேடு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வனத்துறை, சுகாதாரத்துறை, போலீசார் முகாம் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.