search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட தோண்ட கிடைத்த எலும்புகள்: மனிதர்களுடையதா? போலீஸ் விசாரணை
    X

    பலியான அசோக்ராஜ், கைதான சித்த வைத்தியரான கேசவமூர்த்தி

    போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட தோண்ட கிடைத்த எலும்புகள்: மனிதர்களுடையதா? போலீஸ் விசாரணை

    • விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47).

    இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சித்த மருத்துவம் பார்த்து வந்தார். போலி மருத்துவரான இவர் பலருக்கு போதை மருந்து கொடுத்து அவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இவரிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ் (27) என்பவருக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்து கொடுத்து அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    அப்போது மருந்தின் வீரியம் அதிகரித்து அசோக்ராஜ் மயங்கி விழுந்தார். ஆனால் அசோக்ராஜன் இறந்து விட்டதாக நினைத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்துள்ளார்.

    இதற்கிடையே அசோக்ராஜ் வீட்டுக்கு திரும்பாதது குறித்து அவரது பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அசோக்ராஜை தேடினர். அதில் அசோக்ராஜ் போலி சித்த வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டுக்கு சென்றதுதம் அதன் பின் திரும்பி வராததும் பதிவாகியிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரித்ததில், அசோக்ராஜ்க்கு வீரியமிக்க மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவரை கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். மேலும் உடலை வெட்டி நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டையும் தோண்டி பார்த்தபோது அசோக்ராஜன் உடல் பாகங்களில் சில மட்டும் கிடைத்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அனஸ் என்பவர் மாயமாகி இதுவரை வீடு திரும்பவில்லை.

    எனவே அவரது எலும்பு தாடையாக இருக்கலாமோ என போலீசார் சந்தேகித்தனர். அவரையும் இதுபோன்று போதை மருந்து கொடுத்து கொன்று புதைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மனித தாடை எலும்பு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டி.என்.ஏ. உள்ளிட்ட சோதனை நடந்து வருகிறது. அதன் அறிக்கை வந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார், வருவாய்துறை, தயடவியல் நிபுணர்கள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறத்தில் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட தோண்ட சிறிய அளவிலும், நொறுங்கிய நிலையிலும் 25-க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் தென்ப்பட்டன. அவைகளை பெட்டிகளில் சேகரித்து சோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த எலும்பு துண்டுகள் மனித எலும்புகளா ? அப்படி இருந்தால் அவர் யாரையெல்லாம் கொலை செய்து புதைத்திருந்தார் ? அதில் மாயமான அனஸ் உடலின் எலும்புகள் இருந்தனவா ? அல்லது வேறு ஏதேனும் எலும்புகளா ? என்பது குறித்த முழு விவரமும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.

    மேலும் வீட்டில் நடந்த சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இது தவிர கைப்பற்றபட்ட டைரியில் பெயர்களுடன் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்களையும் போலீசார் தொடர்பு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி, தன்னை நாடி வந்தவர்களில் எத்தனை பேரை மூலிகை மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவர்களை கொன்று புதைத்த விவரமும் விசாரணை, பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும்.

    தொடர்ந்து கேசவமூர்த்தி வீட்டை சுற்றி இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×