என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தை கண்டுக்கொள்ளாத பட்ஜெட்: நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் புறக்கணிக்கிறது- மு.க. ஸ்டாலின்
- மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.
- நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தின் தேவைகளை முன்பே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம். மெட்ரோ ரெயில் தமிழகத்திற்கான ரெயில்கள் குறித்து கேட்டிருந்தோம். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கேட்டிருந்தோம்.
மைனாரிட்டி பாஜக அரசை மெஜாரிட்டி பாஜக அரசாக மாற்றி மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் குறித்த 2 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன்.
தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.