search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரசில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி நிதி ரூ.1,38,000 கொடுக்க வேண்டும்- டெல்லியில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு
    X

    காங்கிரசில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி நிதி ரூ.1,38,000 கொடுக்க வேண்டும்- டெல்லியில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு

    • டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
    • தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் தொண்டர்களி டம் நிதி திரட்டப்படுகிறது. நிதி வசூலில் சில மாநிலங்களில் மந்தமான நிலையே உள்ளது.

    காங்கிரசின் வயதை குறிக்கும் ரூ.138, ரூ.338, ரூ.1338 என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெரும்பாலானவர்கள் ரூ.138 மட்டுமே கட்டி இருக்கிறார்கள்.

    இந்நிலையில் நேற்று டெல்லியில் அனைத்து மாநில தலைவர்கள், சட்ட மன்ற கட்சி தலைவர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவது மற்றும் ராகுல்காந்தி தொடங்கவிருக்கும் ஒற்றுமை யாத்திரை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதி செலுத்த வேண்டும்.

    அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் ஆன்லைனில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசீதையும் இணைத்து மனு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதி செய்தார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் தனியாக கூட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சுமூகமான முடிவுகளுக்காக கூட்டணி கட்சிகளை அணுகி வருவதாக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். தேவைப்பட்டால், மாநிலங்களுக்குச் சென்று கூட்டணி கட்சி தலைவர்களையும் காங்கிரஸ் குழு சந்திக்கும் என்றார்.

    Next Story
    ×