search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மே 21 மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
    X

    மே 21 மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

    • தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி 30 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு 2.5 தி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், மே 16 ஆம் தேதி காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×