என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.
- தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர்.
திருவட்டார்:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுகிர்தா. குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6-ந்தேதி கல்லூரி விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்கொலை செய்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் உடன் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் எனது மரணத்திற்கு காரணம் என கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவு போட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்-டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அதுபோல் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.
தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர். பின் பரமசிவம், ஹரீஷ் ப்ரீத்தியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் அதன் விபரங்களை சென்னையில் உள்ள லேபில் அனுப்பி அதன் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
லேப்டாப்பில் உள்ள முழு விவரங்கள் விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு கோர்ட்டில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இந்த குற்றப்பத்திரிகை மூலம் மாணவி சுகிர்தா மரணத்தில் நீதி கிடைக்கும் என அவரது தந்தை மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்.