என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புறநகர் ரெயில் சேவைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
- ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
- இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (ஜூலை 23) துவங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினமும் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 55 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இன்று வழக்கம் போல் ரெயில் சேவைகள் இயங்கும்.
எனினும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரெயில்கள் முன்பு அறிவித்தப்படி இயங்காது. வருகிற சனிக்கிழமை (ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) புறநகர் ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை புறநகர் ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போல் ரத்து செய்யப்படும்.